×

யூகோ வங்கியில் தொழில்நுட்ப கோளாறு வாடிக்கையாளர்களின் கணக்கில் ரூ.802கோடி டெபாசிட்

புதுடெல்லி: கடந்த 10ம் தேதி முதல் 13ம் தேதி வரையிலான காலகட்டத்தில் உடனடியாக பணம் செலுத்தும் (ஐஎம்பிஎஸ்) சேவையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக யூகோ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் கணக்குகளுக்கு ரூ.820 கோடி தவறுதலாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இது தவறான பரிமாற்றம் என்று குறிப்பிட்டுள்ள வங்கி நிர்வாகம் உடனடியாக இந்த தொகையை திரும்ப பெறுவதற்கான செயல்முறைகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி பல்வேறு கணக்குகளில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட தொகையில் ரூ.649கோடியை வங்கி திரும்ப பெற்றுள்ளது. இது மொத்த தொகையான ரூ.820கோடியில் 79 சதவீதமாகும். இந்த தொழில்நுட்ப கோளாறு மனித பிழையா அல்லது ஹேக்கிங் செய்யும் முயற்சியா என்பது குறித்து வங்கி இன்னும் தெளிவுபடுத்தவில்லை. வாடிக்கையாளர்களின் கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட மீதமுள்ள ரூ.171 கோடியை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகளை வங்கி தொடங்கியுள்ளது.

The post யூகோ வங்கியில் தொழில்நுட்ப கோளாறு வாடிக்கையாளர்களின் கணக்கில் ரூ.802கோடி டெபாசிட் appeared first on Dinakaran.

Tags : UCO Bank ,New Delhi ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி